Resources

klklk
Latest Movies :

Search

My Blog List

Share

Ads Banner

Followers

Categories

புதிய தலைமுறை நேரலை

Box Office

ஜெயலலிதா குறித்து செய்தி: வருத்தம் வெளியிட நக்கீரன் கோபால் ஒப்புதல்!



தமிழக முதல்வரும், அ.தி.மு.க.பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குறித்து நக்கீரன் வார இதழ் கடந்த வாரம் வெளியிட்டிருந்த கட்டுரைக்காக, நக்கீரன் அலுவலகம் அ.தி.மு.க-வினரால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு நக்கீரன் இதழ்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கொளுத்தப்பட்டது.
"நக்கீரன்" ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

"நக்கீரன் இதழில் என்னைப் பற்றித் தொடர்ந்து அவதூறான செய்திகளை வெளியிடுகிறார்கள். இது தொடர்பாக நான் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். என்னைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை வெளியிடும் முன், எனது தரப்புக் கருத்தையும் கேட்ட பிறகே, பிரசுரிக்க வேண்டும்” என்று 2006-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் வகையில் இப்போது ஒரு செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மற்றும் என்னுடைய உணவுப் பழக்கம் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்தி அந்த இதழில் வெளியாகியுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த செய்தியை வெளியிடும் முன் என்னிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு கேட்காமல் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

எனவே, அந்த இதழின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் ஜெயலலிதா கோரியுள்ளார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பின் நீதிபதிகள், "முதல்வர் ஜெயலலிதா பற்றி நக்கீரன் இதழில் வெளியான செய்திக்காக அதன் ஆசிரியர் வருத்தம் தெரிவித்துள்ளதாக, அவரது வழக்குரைஞர் பி.டி. பெருமாள் தெரிவித்துள்ளார்.

தாங்கள் செய்த தவறை உணர்வதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், வருத்தம் தெரிவிக்கும் செய்தியை அட்டைப் படச் செய்தியாக வெளியிடவும் ஒப்புக்கொண்டுள்ளார். இது  தொடர்பாக நக்கீரன் தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். பின்னர் இம்மனு மீதான தொடர் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. நடுநிலை - All Rights Reserved
Template Modify by Creating Website
Proudly powered by Blogger